top of page
Search

කුවේටයේ දුක් විදින අපේ ශ්‍රමිකයින් රැකගන්න සජිත් කුවේට් තානාපති හමුවෙයි

  • Writer: ඉනෝකා සත්‍යාංගනී.
    ඉනෝකා සත්‍යාංගනී.
  • May 28, 2020
  • 2 min read

Updated: May 30, 2020


සමගි ජනබලවේගයේ නායක සජිත් ප්‍රේමදාස මහතා සහ කුවේට් තානාපති Khalaf bu dhhair මහතා අතර විශේෂ හමුවක් සහ සාකච්ඡාවක් අද(27) සිදුවිය. මේ වනවිට කොරෝනා වෛරසය හේතුවෙන් කුවේටයේ වෙසෙන ශ්‍රී ලාංකික ශ්‍රමිකයින් විශාල පිරිසක් අසරණව සිටින අතර ඔවුන් වෙනුවෙන් අවශ්‍ය සහන සැලසීම සහ ඔවුන්ගේ ආරක්ෂාව සුරක්ෂිත කිරීම සම්බන්ධයෙන් සජිත් ප්‍රේමදාස මහතා කුවේට් තානාපතිවරයාගේ අවධානය යොමු කරනු ලැබීය. මේ හමුවෙන් පසු මාධ්‍ය හමුවේ ප්‍රකාශයක් කළ සජිත් ප්‍රේමදාස මහතා කියා සිටියේ ආණ්ඩුව නොපමාව කුවේටයේ සිටින අපේ ජනතාව වෙනුවෙන් මැදිහත් වියයුතු බවය. මේ ව්‍යසනය හේතුවෙන් ඉන්දියාව,තායිවානය,බංගලදේශය වැනි  රටවල් කුවේටයේ වෙසෙන තම ශ්‍රමිකයින් සුරක්ෂිත කිරීමට කටයුතු කරද්දී ශ්‍රී ලංකාවේ බලධාරීන් අලස සහ මන්දගාමී ලෙස කටයුතු කරන බව  සජිත් ප්‍රේමදාස මහතා කීය. එදා මැතිවරණය වෙලාවේ රට විරුවන් සේ හැදින්වූ අපේ විදෙස් ශ්‍රමිකයින් අද ආණ්ඩුව විසින්ම බෝම්බකරුවන් සේ හැදින්වීම තුලින් ගම්‍ය වන්නේ ආණ්ඩුවේ කළගුණ නොදත් අමානුෂික ස්වරූපය බවද ඒ මහතා කීය. පසුගියදා සීෂෙල්ස් දිවයිනෙන් එරට පුරවැසියන් මෙරටට ගෙන ඒමේදී ඔවුන් බෝම්බකරුවන් නොවූ බවත් අපේ රටට විදෙස් විනිමය ගෙනෙන අහිංසක අපේම පුරවැසියන් ආණ්ඩුවට බෝම්බ කරුවන් වීම විමතියට කරුණක් බවත් සජිත් ප්‍රේමදාස මහතා කීය. ආණ්ඩුව වහාම කුවේට් ඇතුළු මැදපෙරදිග අසරණව සිටින අපේ ජනතාව කෙරෙහි සක්‍රීයව මැදිහත්විය යුතු බවද ඒ මහතා කීය.


குவைத் நாட்டில் இன்னலுக்குள்ளாகியுள்ள நம் நாட்டுப் பணியாளர்களைப் பாதுகாக்க குவைத் தூதுவரைச் சந்தித்தார் சஜித்.


ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் குவைத் தூதுவர் Khalaf Bu Dhhair ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பொன்று இன்று (27) நடைபெற்றது.


இத்தருணத்தில் கொரோனா வைரஸ் காரணமாக  குவைத்தில் வசிக்கும் பெருந்தொகையான இலங்கையைச் சேர்ந்த வெளிநாட்டுப் பணியாளர்கள் நிர்க்கதியான நிலைமையில் இருக்கின்றனர். அவர்களுக்குத் தேவையான நிவாரணம் வழங்குதல் மற்றும் அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் தொடர்பான விடயங்களை திரு. சஜித் பிரேமதாச குவைத் தூதுவரின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.


இந்த சந்திப்பின் பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த சஜித் பிரேமதாச குவைத்தில் இருக்கும் நம் நாட்டு மக்களது விடயம் தொடர்பில் அரசாங்கம் தாமதிக்காது செயலாற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டார்.


இவ் அனர்த்த நிலைமையைக் கருத்திற்கொண்டு இந்தியா, தாய்வான், பங்களாதேஷ் போன்ற நாடுகள் குவைத்தில் வசிக்கும் தமது நாட்டுப் பிரஜைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முனைப்புக் காட்டும் நிலையில் இலங்கை அதிகாரிகள் அவ்விடயத்தில் சோர்வாகவும், மெதுவாகவும் கருமமாற்றுவதாகவும் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.


அன்று தேர்தல் சமயத்தில் ‘வெளியூர் வீரர்கள்’ என அழைக்கப்பட்ட நம் வெளிநாட்டுப்பணியாளர்கள் இன்று அரசாங்கத்தாலேயே குண்டுதாரிகள் என அழைக்கப்படுவதன் மூலம் அரசாங்கத்தின் நன்றிமறந்த மனிதாபிமானமற்ற சுயரூபம் தெளிவாகப் புலப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.


சில நாட்களுக்கு முன் சீஷெல்ஸ் தீவுகளிலிருந்து இங்கு அழைத்து வரப்பட்ட  அந்நாட்டு பிரஜைகள் குண்டுதாரிகள் இல்லை, ஆனால் நமது நாட்டுக்கு அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் நம் நாட்டின் அப்பாவி மக்கள் மாத்திரம் அரசாங்கத்துக்கு குண்டுதாரிகளாகத் தெரிவது வியப்புக்குரிய ஒரு விடயம் எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


குவைத் உள்ளிட்ட மத்தியகிழக்கு நாடுகளில் நிர்க்கதியாக நிற்கும் நமது நாட்டு மக்களது விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் செயலூக்கம் மிக்க தலையீடுகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.



 
 
 

Comments


Join my mailing list

Thanks for submitting!

© 2023 by The Book Lover. Proudly created with Wix.com

bottom of page